தலைமை பெண் காவலர் மரணமடைந்த விவகாரம் - சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கு : எஸ்.பி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர், தலைமை பெண் காவலர் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-09-28 11:18 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது  மகள் பானுப்ரியா விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்ததாக கூறியுள்ளார். அவர், பெல்ட்டால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததாகவும், மகளின் கணவர் விக்னேஷ், குடித்துவிட்டு வந்து மகளிடம் அவ்வப்போது பிரச்சினை செய்து வந்துள்ளதாக கூறியுள்ளார். மகளின் இறப்பில் சந்தேகம் என, சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான விசாரணை இல்லாததால்,  சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், விருதுநகர் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்