தலைவர்களை குண்டு வைத்துக் கொல்ல முயன்றவர் - சிறையில் உள்ள தீவிரவாதி பிலால் மாலிக்
தேசியத் தலைவர்களை குண்டு வைத்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைதாகியுள்ள பிலால் மாலிக்கை சிறையில் சாரைப் பாம்பு கடித்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
2011 ஆம் ஆண்டு பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வரும்போது வழிப்பாதையில் பைப் குண்டு வைத்தது, பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி செய்தது உள்ளிட்ட வழக்குகளில் பிலால் மாலிக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே பிலால் மாலிக்-கை சாரைப் பாம்பு கடித்து விட்டதாகவும், கடித்த பாம்பை பிலால் மாலிக் அடித்துக் கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலால் மாலிக்கின் உயிருக்கு ஆபத்தில்லை எனவும், அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு விரைவில் சிறைக்கு திரும்புவார் என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.