களவாணி பட நடிகரிடம் கைவரிசை - போலீசார் தீவிர விசாரணை
திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.;
"களவாணி", "கலகலப்பு", கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த 12-ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர்கள் தன்னுடன் செல்பி எடுத்து கொண்டதாகவும், அப்போது தன்னுடைய விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 நாட்களாக தேடியும் செல்போன் கிடைக்கவில்லை என்றும், காவல்துறையினர் தன்னுடைய செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கானாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.