கொரோனாவால் பறிபோன வருமானம் - தம்பதி தீக்குளித்து தற்கொலை
கொரோனாவால் வருமானம் முடங்கிய விரக்தியில் திருச்சியை சேர்ந்த தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
கொரோனாவால் வருமானம் முடங்கிய விரக்தியில் திருச்சியை சேர்ந்த தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் நீதிமன்றம் அருகே உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி மகாலட்சுமி. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி உள்ளனர். உணவிற்கு வழியின்றி தினமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. வறுமையால் விரக்தியடைந்த அவர்கள் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.