சென்னையில் தொடர் விபத்து நடக்கும் பகுதிகள் - விபத்துகளை தடுக்க திட்டம் வகுப்பு

சென்னையில் அதிக விபத்து ஏற்படும் 11 அபாயகரமான இடங்களை நெடுஞ்சாலைத்துறை கண்டறிந்துள்ள நிலையில், அங்கு விபத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...;

Update: 2021-09-09 05:38 GMT
சென்னையில் அதிக விபத்து ஏற்படும் 11 அபாயகரமான இடங்களை நெடுஞ்சாலைத்துறை கண்டறிந்துள்ள நிலையில், அங்கு விபத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் வாகனங்கள் உள்ள நகரம் சென்னை. இங்கு சுமார்  60 லட்சம்  வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அதில் 78 சதவீதம் இரு சக்கர வாகனம் எனவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.   

லட்சக்கணக்கான வாகனங்களின் போக்குவரத்து காரணமாக, சென்னையில் சாலை விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. இந்நிலையில், சென்னையில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் 11 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

வாலாஜா சாலை சந்திப்பு, ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு, பூக்கடை சாலை சந்திப்பு உள்ளிட்ட 11 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்