இளைஞரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனு தள்ளுபடி
மதுரையில் இளைஞரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அர்ஷத் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் வசந்தி ஜாமீன் கோரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த, மனுவை விசாரித்த நீதிபதி அனுராதா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.