விநாயகர் சதுர்த்தி - விதிகளை பின்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
விநாயகர் சதுர்த்தியின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு விதிகளை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியதை ஏற்று, அதுகுறித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.;
விநாயகர் சதுர்த்தியின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு விதிகளை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியதை ஏற்று, அதுகுறித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட கோரினார். மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சதுர்த்தி நாளில் மக்கள் கூடுவதை தடுக்க, மத்திய அரசு அறிவுறுத்தல் படி, வழிகாட்டு விதி அறிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், சிறு கோயில்கள் திறக்கப்படும், வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை, அறநிலையத் துறை அதிகாரிகள் சேகரித்து, நீர்நிலைகளில் கரைப்பார்கள் என தமிழக அரசு கூறியது. இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா விதிகளில் எந்த சமரசமும் செய்யாமல், விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.