கிணற்றில் தவறி விழுந்த நபர் - 12 மணி நேரம் கிணற்றில் போராட்டம் : படுகாயங்களுடன் மீட்ட தீயனைப்பு துறையினர்

ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த செல்வராஜ் என்பவரை தீயணைப்பு துறையினர் 12 மணி நேரத்திற்க்கு பின் உயிருடன் மீட்டனர்;

Update: 2021-08-09 12:23 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், பேருந்து ஓட்டுனர் பேளுக்குறிச்சி காவல் நிலையம் முன்பு பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த செல்வராஜ், தப்பி ஓட முயன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த தோட்ட பணியாளர்கள், கிணற்றில் போராடி வந்த செல்வராஜை கண்டு தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத் துறையினர் 12 மணி நேரமாக உயிருக்கு போராடிய செல்வராஜை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்