"டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் கட்டப்படும்"- அமைச்சர் மெய்யநாதன்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதுடன், புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.;
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதுடன், புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியின் 136வது பிறந்த நாளை ஒட்டி புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.