தினமும் உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை - நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரணமா?
அதிர்ச்சி அடைய செய்து கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கடந்த சில நாட்களாக ஓய்ந்திருக்கிறது.;
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாள்தோறும் அதிர்ச்சி அளித்துக்கொண்டிருந்த பெட்ரோல் விலை, தற்போது 102 ரூபாயை கடந்திருக்கிறது.
டீசல் விலையும் 94 ரூபாயை கடந்திருப்பதால் அதன் தாக்கம் சாமனிய மக்களின் அன்றாட வாழ்வில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, காய்கறிகள் விலை உயர்வுக்கு டீசல் விலையை முக்கிய காரணமாக குறிப்பிடுகிறார்கள்.இத்தகைய சூழலில், கடந்த 10 நாட்களாக பெட்ரோல் - டீசல் விலை உயராமல் இருப்பதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதுதான் பிரதான காரணமென்ற கருத்து நிலவுகிறது