நவீன டிரான்ஸ்பான்டர் அக்டோபருக்குள் மீனவர்களுக்கு வழங்கப்படும் - மீன்வளத்துறை செயலாளர் தகவல்
ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்புக்காக, அக்டோபர் மாதத்திற்குள் டிரான்ஸ்பான்டர் கருவிகள் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை செயலாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.;
ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்புக்காக, அக்டோபர் மாதத்திற்குள் டிரான்ஸ்பான்டர் கருவிகள் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை செயலாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை மழை, புயல் காலங்களில் தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, மீனவர்களை தொடர்பு கொள்ளும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும் இஸ்ரோ நிறுவனம் உதவியுடன் நவீன டிரான்ஸ்பான்டர் கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.
இதற்காக15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் நவீன டிரான்ஸ்பான்டர் கருவிகளை வாங்க மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது. இந்த கருவிகள் அக்டோபர் மாதத்திற்குள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் ஆபத்தில்லாமல் மீன்பிடிப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் மீன்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் எல்லை தாண்டுவதை கண்காணித்து இதன் மூலம் எச்சரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.