தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-07-11 12:02 GMT
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் 12 வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்