அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஆரம்பமாகிறதா மூன்றாவது அலை?

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மட்டுப்பட்டு வரும் நிலையில், நோய் பரவும் விகிதம் சற்றே அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது. மூன்றாவது அலை ஆரம்பமாகிறதா என்பதை அலசுகிறது, இந்த தொகுப்பு...;

Update: 2021-07-09 13:56 GMT
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மே மாதத்தில் உச்சமடைந்து, பின்னர் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஜூலை 8ஆம் தேதி 43,393 தொற்றுதல்கள் பதிவாகியுள்ளன. கடந்த சில நாட்களாக  தினசரி தொற்றுல்கள் வீழ்ச்சியடையும் விகிதம் குறைந்து,  நோய் பரவல் விகிதம் சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரகம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன. கடைத் தெருக்கள், சுற்றுலா தளங்களில் பெரும் திரளாக மக்கள் கூடுவது அதிகரித்துள்ள நிலையில், நோய் பரவல் விகிதம் அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக உள்ளதாக தொற்றுநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.கேரளாவில் தினசரி தொற்றுதல்கள் அளவு தொடர்ந்து அதிகரித்து, வியாழன் அன்று 13,772ஐ எட்டியுள்ளது. அங்கு நோய் பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை, ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி, செப்டம்பரில் உச்சமடையும் என்று எஸ்.பி.ஐ வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்