சானிடைசரால் அடுப்பு பற்ற வைத்த சிறுவன் - உடலில் தீ பரவி சிறுவன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சானிடைசர் ஊற்றி அடுப்பு பற்ற வைத்த சிறுவன் உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2021-07-08 09:47 GMT
விரகுபேட்டை பகுதியை சேர்ந்த 13வயது சிறுவன் ஸ்ரீராம், நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடியுள்ளார். இதற்காக அடுப்பு பற்ற வைக்க சிறுவன் சானிடைசர் பயன்படுத்தியுள்ளான். அப்போது குப்பென்று பிடித்த தீ, சிறுவன் மீது பரவி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. சிறுவர்களின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீராமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்த நிகழ்வு பெற்றோர், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எளிதில் தீப்பற்றக் கூடிய சானிடைசர் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், கூட்டாஞ்சோறு விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாராணமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்