"மாற்று திறனாளிகளுக்கு ஏதுவாக கட்டடம்"- உயர் நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல், அரசு கட்டடங்களை கட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-07-05 13:17 GMT
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், அரசு கட்டடம் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 32 மாவட்டங்களில் அரசு கட்டடம், கழிப்பறையுடன் அமைந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை அளித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு கட்டடள் அனைத்தும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், 2 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.மேலும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல், எந்த அரசு கட்டிடங்களும் கட்டக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்கு பொதுப் பணித்துறை அறிவுறுத்த கூறினார். செப்டம்பர் 1ஆம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்