12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் : "முதலமைச்சருக்கு நூற்றுக்கு நூறு" - கவிஞர் வைரமுத்து பாராட்டு
பொதுத் தேர்வு என்ற உளவியல் போரிலிருந்து மாணவ சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.;
பொதுத் தேர்வு என்ற உளவியல் போரிலிருந்து மாணவ சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உயர் கல்வியா உயிரா என்ற வினாவை முன்வைத்து உயிரே என்று முடிவெடுத்ததில் மாணவர்களின் பதற்றம் தணிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் முதலமைச்சருக்கு மதிப்பெண் நூற்றுக்கு நூறு எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்