ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா
தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.;
ஆண்டுதோறும் தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நாளான இன்று, ஆயிரத்து 35 ஆவது ஆண்டு சதய விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா , இம்முறை கொரோனா காரணமாக கலை நிகழ்ச்சிகள் இன்றி ஒரு நாள் மட்டும் நடைபெற உள்ளது. காலை மங்கல இசையுடன் தொடங்கிய சதய விழாவில் கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர் திருமுறை தேவார பாடல்களை பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அரசு சார்பில் பெரிய கோவிலில் இருந்து பேரணியாக சென்று மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.