பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வெடிவிபத்து - கேஸ் பலூன் மீது பட்டாசு விழுந்ததால் பலர் காயம்

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-09-19 03:05 GMT
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பாடியில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்சி நிர்வாகியை வரவேற்று கொளுத்தப்பட்ட பட்டாசு , கேஸ் பலூன் மீது பட்டு வெடித்து சிதறியது. அப்போது, அங்கு நின்றிருந்த கட்சியினர் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பத்திரிகையாளர் சிலரும் காயமடைந்தனர். இது குறித்து கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்