அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் - முதல்வர் பழனிசாமி வீட்டில் ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.;
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்ரோர் பங்கேற்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில் முதல்வர் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.