விவசாய மசோதா - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-09-18 10:26 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், Card-1  இந்த மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் வகையில் இருப்பதாக விமர்சித்துள்ளார்.  இந்த மூன்று சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயிகளை அடமானம் வைக்கும் செயல் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  விவசாயத்தை "வருமான வரி வரம்பிற்குள்" கொண்டு வரும் சதி தான் இந்த சட்டங்கள் என அறிக்கையில் கூறிய அவர்,  இந்த மசோதாக்களை தி.மு.க எதிர்த்த நிலையில், அ.தி.மு.க அரசு ஆதரவு தெரிவித்து, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.  இனியொரு முறை மேடைகளில் நின்று "நான் ஒரு விவசாயி" என்று மட்டும் பேசாதீர்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்