ரூ.82.60 கோடியில் பல்லாவரம் மேம்பாலம் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
பல்லாவரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.;
பல்லாவரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜிஎஸ்டி சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், 82 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது