வேட்டைக்காரன் திரைப்பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழப்பு

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.;

Update: 2020-09-17 03:20 GMT
விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாபுசிவன் உயிரிழந்தார். விஜய்-திரிஷா நடிப்பில், வெளிவந்த 'குருவி' திரைப்படத்திற்கும் இவர் வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் பாபு சிவன் மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்