மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் பஸ்கள் - போக்குவரத்துத்துறை உத்தரவாதம்

தமிழக போக்குவரத்து துறையில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் வகையில் பஸ்கள் வாங்கப்படும் என போக்குவரத்துத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.;

Update: 2020-09-15 17:05 GMT
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரெயில்வே துறை, போக்குவரத்து துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சம்பந்தமான வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு அமல்படுத்தப்படவில்லை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக எந்த பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. அப்போது, போக்குவரத்துதுறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இனி கொள்முதல் செய்யப்படும் 50 பேருந்துகளில், 10 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் வகையில் வாங்கப்படும் என உறுதியளித்தார். இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், ரெயில்வே, பள்ளி கல்வித்துறை, போக்குவரத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்