இட மாறுதல் குறித்த மருத்துவ கவுன்சிலின் மேல் முறையீடு வழக்கு - மருத்துவ கவுன்சிலுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஒரு பல் மருத்துவ கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு மாறுதலாகி செல்லும் போது, அதற்கான, அனுமதி வழங்கும் விதிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.;
ஒரு பல் மருத்துவ கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு மாறுதலாகி செல்லும் போது, அதற்கான, அனுமதி வழங்கும் விதிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இட மாறுதல் குறித்து இந்திய பல் மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2 ஆம் ஆண்டு படிப்பின் போது மட்டுமே இடமாறுதல் செய்ய முடியும் என விதிகள் உள்ளதால், மாணவி மீண்டும் 2ஆம் ஆண்டு சேர விரும்பினால் புதிய மனுவை கொடுக்கலாம் என கூறினர். அதை 4 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.