சனி பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.;

Update: 2020-09-12 07:44 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  2ஆவது சனிக்கிழமையான இன்று, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்து, பக்தர்கள் சாமி தரிசனம் ​செய்த நிலையில், நளன் குளத்தில் நீராட அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்