இளம் பெண் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய 3 பேர் கைது
சென்னையில் பழிவாங்க வந்த நபர் இல்லாததால், மாணவர் உட்பட இருவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
சென்னை விருகம்பாக்கத்தில் பகுதியில் வசித்து வரும் கஜேந்திரன் மற்றும் அவரது மகன் தியாகுவை கடந்த 9 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு வளசரவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த புறா மணியின் தம்பி மற்றும் கூட்டாளிகளான சிவசங்கர், சிவராமன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். ரவுடி புறா மணியை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவரான சரத் என்பவரை கொலை செய்வதற்காக வந்த இடத்தில், அவர் இல்லாததால், சரத்தின் பெரியம்மா மகனான 10 வகுப்பு மாணவர் பெருமாள் என்கிற தியாகுவை வெட்டி சென்றதை ஒத்துக் கொண்டுள்ளனர். மேலும், சரத்தை தாக்க முடியதா ஆத்திரத்தில் வீடு திரும்பும் வழியில், வடபழனி அம்பேத்கர் நகரில், வீடு காலி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தீபிகா என்ற பெண்ணிடம் கத்தியை காட்டி செயினை பறிக்க முயன்றதாகவும், அதை தடுக்க வந்த கண்ணனை தலையில் வெட்டிவிட்டு சென்றதையும் விசாரணையில் 3 பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டிலிருந்த மணி பர்ஸ், லேப்டாப் மற்றும் 3 செல்போனை பறித்து சென்றதையும் ஒத்துக் கொண்ட நிலையில், மூவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.