கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணி - தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன் நேரில் ஆய்வு

கீழடியில் நடந்து வரும் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2020-09-11 05:05 GMT
கீழடியில் நடந்து வரும் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன் நேரில் ஆய்வு  செய்தார். 40 லட்ச ரூபாய் செலவில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடந்து வரும் அகழாய்வு பணியின் போது ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்ட உதயசந்திரன், பொருட்கள் கிடைத்த குழிகள், அதன் தன்மை காலம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். பிப்ரவரியில் தொடங்கிய அகழாய்வு பணிகள் செப்டம்பருடன் நிறைவு பெற உள்ளதையடுத்து ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்