"அரசு அதிகாரிகளின் ஊழல் புகாரை விசாரிக்க என்ன நடைமுறை?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.;
அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டப்பிரிவு 19 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197-ன் கீழ் ஊழல் புகாரை விசாரிப்பது தொடர்பாக தனிநபர் அனுமதி பெற தற்போது பின்பற்றப்படும் நடைமுறை குறித்து மாநில ஊழல் தடுப்பு , கண்காணிப்புத்துறை ஆணையர் மற்றும் தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டது.