"தமிழக சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காத மத்திய அரசு - அமைச்சர் விஜயபாஸ்கரின் கடிதத்தை மதிக்குமா?"
நீட் விவகாரத்தில், சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காத மத்திய அரசு, அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தையா மதிக்க போகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.;
நீட் விவகாரத்தில், சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காத மத்திய அரசு, அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தையா மதிக்க போகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், நீட் தேர்வை எதிர்த்து, 7 மாநில அரசுகளை போல், தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்லுமாறு கோரியதாகவும், ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சரின் இந்தக் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள் என வினவியுள்ள ஸ்டாலின், இந்த மாதிரியான பொய், ஏமாற்றுகளை விடுத்து, தேவையானதை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.