எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - 90% மயக்க நிலையில் இருந்து மீண்டார் எஸ்.பி.பி.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.;
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 90% மயக்க நிலையில் இருந்து எஸ்பிபி மீண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புவதாகவும், அந்த வீடியோவில் சரண் தெரிவித்துள்ளார். இதனிடையே, எஸ்பிபி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தகவலறிந்து, அவரது ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.