சிவகங்கை: நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் திருப்பத்தூரில் விவசாயிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் திருப்பத்தூரில் விவசாயிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள வாணியங்காடு, தென்மாபட்டு காட்டாம்பூர், தேவரம்பூர், தானிப்பட்டி, பட்டாகுறிச்சி, பிராமணம்பட்டி, குண்டேந்தல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம விவசாயிகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்,. விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்