தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.;
காற்று மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி கடலில், 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் எழுதும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.