மக்கள் கூட்டத்தால் நிரம்பிய சந்தைகள் - பூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
வடசென்னையில் உள்ள சந்தைகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது.;
வடசென்னையில் உள்ள சந்தைகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை சந்தைகள் மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. முகக்கவசம் அணிந்து வந்த மக்கள், விநாயகர் சிலை, பூ, பழம், அருகம்புல், எருக்கம் பூமாலை , பூணூல், குடை உள்பட சதுர்த்தி பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.