கட்சி நிர்வாகிகளுடன், முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சேலத்தில், கட்சி நிர்வாகிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.;

Update: 2020-08-22 08:47 GMT
அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நடந்த இக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் செம்மலை, உள்ளிட்ட சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மாநகர் மற்றும் புறநகர் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி மேம்பாட்டிற்காக  மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். தொண்டர்கள் உத்வேகத்துடன் செயல்பட பொறுப்பாளர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறிய முதலமைச்சர், முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில்  பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு அறிவுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்