இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார் - காதலன் மற்றும் அவரது பெற்றோர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணை, காதலித்து ஏமாற்றிய புகாரில், காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2020-08-22 05:45 GMT
நடுப்பட்டி ஊராட்சி எல்லத்துரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம்பெண்ணும்,அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன்,  பொறியியல் பட்டதாரியான கிரிசங்கரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.இவர்களின் திருமணத்திற்கு இளம்பெண் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில், கிரிவாசன் வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கிரிசங்கரின் பெற்றோர் இளம் பெண் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இளம் பெண், தன்னை திருமணம் செய்துக்கொள்ளக்கூறி காதலன் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டார்.இதையடுத்து,கிரிசங்கர் தன்னை காதலித்து திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாகவும்,  அவரது பெற்றோர், தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும்,அவர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில், புகார் அளித்தார்.  மூவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்