ஆகஸ்ட் 28 முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகளை துவங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.;
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகளை துவங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் . வரும் 28ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையும், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையை வரும் 29ஆம் தேதி முதல் , செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.