விநாயகர் சதுர்த்தி : தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.;

Update: 2020-08-20 11:41 GMT
விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது என்று உயர்  நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் - ராஜமாணிக்கம் அமர்வு விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்தது. மேலும், வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்