காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேதனை
தூத்துக்குடியில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்த காவலர் குடும்பத்துக்கு தி.மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடியில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்த காவலர் குடும்பத்துக்கு தி.மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காவலர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என வேதனை தெரிவிப்பதாக கூறி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க, தமிழக காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.