முதலமைச்சர் தொடர்ந்த மானநஷ்டஈடு வழக்கு - நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update: 2020-08-19 07:36 GMT
ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரிக்க மறுத்து விட்ட சென்னை உயர் நீதிமன்றம்  வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்