அமித்ஷா நலம் பெற முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, அமித்ஷாவுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலம் பெற்றதாக வீடு திரும்பினார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்படவே மீண்டும் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். எனவே, அவர் விரைவாக நலம் பெற்று மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென வாழ்த்து, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.