காதலன் வீட்டு முன் இளம்பெண் போராட்டம் - காதலித்து விட்டு ஏமாற்றியதாக புகார்

சேலம் அருகே காதலித்து விட்டு ஏமாற்றியதாக கூறி காதலன் வீட்டின் முன் பொறியியல் பட்டதாரி பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.;

Update: 2020-08-18 08:33 GMT
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள எலத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிபிரியா. பொறியியல் பட்டதாரியான இவர், கிரிவாசன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு கிரிவாசன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு பெண்ணின் வீட்டிற்கு சென்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சசிபிரியா, தன் காதலன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் இருதரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்