"இறுதி வாக்காளர் பட்டியல் பட்டியல் ஜன.15ஆம் தேதி வெளியிடப்படும்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

இறுதி வாக்காளர் பட்டியல் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.;

Update: 2020-08-17 12:13 GMT
அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டு நவம்பர் மாதம்16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை வாக்களார்கள் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களோடு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சிறப்பு முகாம்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சத்தியபிரதாசாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்