அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை - சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.;
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. இதேபோல், தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், முதலில் மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.