கேப்டன் கூல் தோனி - முதலமைச்சர் புகழாரம்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனிக்கு, அவரது சாதனைகளை குறிப்பிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனிக்கு, அவரது சாதனைகளை குறிப்பிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எனவும், முதலமைச்சர் புகழாரம் சூட்டி உள்ளார். கேப்டன் கூல் தோனி என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்திய அணியை வழிநடத்தி பல வெற்றிகளை குவித்த தோனியை ஒவ்வொரு இந்தியரும் நினைவு கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார். அவரின் சாதனைகள், கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.