தேனியில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.;

Update: 2020-08-16 09:36 GMT
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி, அங்கு மேலும்196 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 9 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 6  ஆயிரத் 546பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 3 ஆயிரத்து 241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 86 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலளம் மொத்த பாதிப்பானது, 12 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11 ஆயிரத்து 300 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், ஆயிரத்து 28 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 315 ஆக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேலும்129 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 7 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆயிரத்து 478 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 ஆயிரத்து 805 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவிற்கு 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5 ஆயிரத்து 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள உள்ள நிலையில், 47பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தற்போது 695 பேர் சிகிச்சையிலும், 769 பேர் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்