கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 17 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.;

Update: 2020-08-16 04:41 GMT
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்  தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 17 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து 20ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதே நாளில் பிற்பகலில் தர்மபுரி மாவட்டத்திலும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத்தொடர்ந்து 21 ஆம் தேதி  கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டம் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்