கோட்டையில் கொடியேற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி - வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.;

Update: 2020-08-15 02:44 GMT
நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். முன்னதாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் கவுரவிக்கிறார். மேலும் 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதையொட்டி அப்பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக, சமூக இடைவெளியுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி, மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்