தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா

தூத்துக்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-07-24 02:59 GMT
தூத்துக்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவரது மகள், மருமகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீதா ஜீவனை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 19 பேர்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்