உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு: அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வினியோகம்

கொரோனா காரணமாக பள்ளி விடுமுறையில் இருப்பதால் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் , அரசு உத்தரவின்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வினியோகம் செய்யப்படுகிறது.;

Update: 2020-07-22 09:49 GMT
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பத்தாம் வகுப்பு வரை மதிய சத்துணவு வழங்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 
அதற்காக, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான அரிசி மற்றும் பருப்பு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவற்றை மாணவர்களுக்கு வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது, சென்னை அமைந்தகரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு  வழங்கப்பட்டது, சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் அழைத்து அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்,
Tags:    

மேலும் செய்திகள்