தாயை இழந்த 15வயது சிறுமி - சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய குடிகார தந்தை
தந்தை மற்றும் தாத்தாவால் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.;
தஞ்சையை சேர்ந்த 15 வயது சிறுமி, தாயார் இறந்த நிலையில், உறவினர் பாதுகாப்பில் இருந்துள்ளார். பின்னர், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
* எந்நேரமும் மதுபோதையில் இருக்கும் தந்தையின் பாலியல் துன்புறுத்தல் குறித்து, உறவினர்களிடம் சிறுமி கூறியுள்ளார். இதனால், தாத்தாவிடம் ஒப்படைத்துள்ளளனர்.
*அவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சீரழித்த நிலையில், 15 வயது சிறுமி 7 மாத கர்ப்பிணியானார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், குழந்தைபெற முடியாது என கூறியுள்ளனர்.
* இதைத் தொடர்ந்து, கர்ப்பத்தை கலைக்கக் கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க, அதற்காக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர், உரிய பாதுகாப்புடன் ஈடுபட்ட வேண்டும் என்றும், சிறுமியை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.